மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.

DIN

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அத்துடன் 3 தேக்கரண்டி சீரகத்தைச் சேர்த்து அரைத்துவிட சாம்பார் மணக்கவும்.
எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப்பின் சுவையே அலாதிதான்.
 ஊறுகாய் செய்யும்போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
புளித்த தோசை மாவு கொஞ்சமாக இருந்தால், அதில் மூன்றுபடி ஜவ்வரிசியை ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து போண்டா சுவையாக இருக்கும்.
வெண்டைக் குழம்பு  வைத்தால் அதில் ஒரு கரண்டி அரிசி மாவை போட்டுவிட்டால், வெண்டைகள் கரையாமலேயே இருக்கும்.
 முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து உடைத்ததும் உடனடியாக நீரில் நனைத்துவிட்டால், இரு நாள்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

SCROLL FOR NEXT