முகப்பொலிவு பெற...
ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன், வாழைப்பழம் சேர்த்து கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசிவர பருக்களால் உண்டான வடுக்கள், கருந்திட்டுகள் மறையும்.
ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன், வாழைப்பழம் சேர்த்து கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசிவர பருக்களால் உண்டான வடுக்கள், கருந்திட்டுகள் மறையும்.
பாதி கிவிப்பழம் மசித்து அதனுடன் தயிர் 1 தேக்கரண்டியை சேர்த்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். கிவிப் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது முகத்தை பொலிவாக்குகிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சரும செல்களைப் புத்துயிர் பெற செய்கிறது.
தக்காளி பழச்சாறுடன் அரிசி ஊற வைத்துக் கழுவிய நீர் சேர்த்து உடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து இந்தப் பேஸ்ட்டை 15-20 நிமிடங்கள் முகம், கழுத்தில் பூச பளபளக்கும். சிவந்த சருமம் கிடைக்கும்.
Advertisement
Advertisement
தேன், பப்பாளி இரண்டையும் நன்றாக பேஸ்ட் செய்யவும். இந்தப் பேஸ்ட்டை உங்கள் முகம், கழுத்து முழுவதும் தடவவும். உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் பளபளப்பாக பளிச்சென இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.