மகளிர்மணி

தூங்கும்போது பற்களைக் கடிக்கிறீர்களா?

தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தூங்கும்போது பற்களைக் கடிக்காமல் இருக்க சில ஆலோசனைகள்:

தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

காப்ஃபைன் அதிமுள்ள உணவுகளான சாக்லேட்டுகள், டீ, காபி அருந்துவதை குறைத்துகொள்ளவும்.

மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால், அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் பற்களை கடிக்க வாய்ப்புண்டு. இதற்கு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

பற்களைக் கடிக்கும் பழக்கம் மேலும் நீடித்தால் அருகில் உள்ள பல் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது.

பொதுவாக, வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள் அடக்கி வைத்து கொள்வோருக்கு அவை--தூக்கத்தின்போது இப்படி வெளிப்படும். தூக்கத்தில் பற்களைக் கடிப்பதால் தலைவலி, பல் தேய்மானம், பல் கூச்சம், தூக்கமின்மை, பற்கள் உடைந்து விழுதல், முகம், தாடையில் வலி போன்றவை ஏற்படலாம். 

மன அழுத்தம், மன இறுக்கத்தை தடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவுகள், காப்பைன் நிறைந்த டீ, காபி அதிகம் அருந்துவதால் இந்தப் பழக்கம் ஏற்படலாம். மருத்துவர்கள் இதனை "பிரக்ஸிஸம்'  என அழைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT