மகளிர்மணி

ஆடிப்பால்

தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப் பருப்பு  (அ)  பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

தேங்காய்  ஒன்று
துருவிய வெல்லம்  அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்   ஒரு தேக்கரண்டி
பச்சரிசி (அ)  வறுத்த பாசிப் பருப்பு  ஒரு மேசைக் கரண்டி

செய்முறை: 

தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப் பருப்பு  (அ)  பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.  அந்தச் சக்கையைச் சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யவும். மொத்தம் மூன்று முறை எடுத்த பாலையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து வைக்கவும். 

அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு சிறிதளவு விட்டால் போதும். அடுப்பில் ஏற்றிக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி ஏலக்காய்த் தூள் சேர்த்து நுரைத்து வரும்போதே இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT