சுருள்அரிசி
பச்சரிசியைக் கழுவி நீரை வடித்து துணியில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் வெறும் வாணலியில் மிதமாக வறுக்கவும். மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும்.
தேவையானவை:
பச்சரிசி 2 கிண்ணம்
துருவிய வெல்லம் ஒன்றரை கிண்ணம்
துருவிய தேங்காய் கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
பொட்டுக் கடலை 2 மேசைக் கரண்டி
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி நீரை வடித்து துணியில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் வெறும் வாணலியில் மிதமாக வறுக்கவும். மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதிக்கும்போது தேங்காயைத் துருவலை அதில் போட்டு, பொட்டுக் கடலையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் பாகு வந்ததும் இறக்கி வைத்துவிடவும். ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். ஆறியதும் உடைத்த அரிசி ரவையை அதில் போட்டுக் கிளறவும். சுருள் அரிசி தயார்.