தேவையானவை:
கடலைப்பருப்பு ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் ஒன்றரை கிண்ணம்
மைதா மாவு ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
கேசரி கலர் சிறிதளவு
தேங்காய்த் துருவல் கால் கிண்ணம்
வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
நெய் 3 மேசைக்கரண்டி
செய்முறை:
மைதா மாவு, வெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றுடன் நீர் சேர்த்து, கேசரி கலரையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப் பருப்பை அளவான நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் அதில் இருக்கும் சிறிதளவு நீரிலேயே வெல்லத்தையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பூரணம் தயார். பூரணம் தளர்வாக இருந்தால், ஒரு தேக்கரண்டி நெய்விட்டு பாத்திரத்தில் போட்டு அடுப்பிலேற்றிக் கிளறவும். பூரணம் கெட்டியாகிவிடும்). பிசைந்து வைத்த மைதா மாவிலிருந்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, அப்பளம் போல் தட்டி அதன் மீது எலுமிச்சை அளவு பூரணம் வைத்து மூடி போளியாகத் தட்டவும். போளியை தோசைக் கல்லில் போட்டு ஓரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.