மகளிர்மணி

மரவள்ளிக்கிழங்கு வடை 

புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு,  காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கெட்டியாக,  கொரகொரப்பாக அரைக்கவும்.

கவிதா சரவணன்

தேவையானவை

மரவள்ளிக்கிழங்கு  ஒன்று
புழுங்கல் அரிசி  2 கிண்ணம்
காய்ந்த மிளகாய்  4
துவரம் பருப்பு  கால் கிண்ணம்
கறிவேப்பிலை  சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித் தழை  
2  மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்  ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு 

செய்முறை: 

புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு,  காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கெட்டியாக,  கொரகொரப்பாக அரைக்கவும். மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி கேரட் துருவியால் துருவி,  அதை அரைத்த மாவில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கலந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு,  ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT