மகளிர்மணி

குழந்தைகள் பராமரிப்பு..!

குழந்தைகளின் சருமம் பொதுவாகவே மிக, மிக மிருதுவாக இருக்கும். அதுவும் இரண்டு வயது வரை சென்சிடிவாகவும் இருக்கும்.

செளமியா சுப்ரமணியன்

குழந்தைகளின் சருமம் பொதுவாகவே மிக, மிக மிருதுவாக இருக்கும். அதுவும் இரண்டு வயது வரை சென்சிடிவாகவும் இருக்கும். சின்ன கொசு, எறும்பு கடித்தாலும் சிகப்பான திட்டுகள் வரும். சில குழந்தைகளுக்கு அதனால் அலர்ஜியும் வர வாய்ப்பு உள்ளது.  இப்படிபட்ட அவர்களின் சருமம் இந்தக் குளிர் காலத்தில் மேலும் வறண்டு போகும். எனவே, இந்தப் பருவத்தில் குழந்தைகளின் சருமத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் சருமப் பாதுகாப்பு என்பதும் முக்கியம்.

குழந்தைகளுக்கு கட்டாயமாக  ஆயில் மசாஜ்   செய்த பிறகே குளிக்க வைக்க வேண்டும்.  

உடலுக்குத் தேவையான ஒமேகா அமிலம் ஆலிவ், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும்.

 பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, இ அதிகம் உள்ளது.

ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்க வைக்கவும். இதனால்அரிப்பு, சிரங்கு போவதுடன், குளிர்க்காலத்தில் வரும் கருமையும் மறைந்து சருமம் இயற்கை நிறத்தை பெறும்.

பாசிப்பருப்பையும், கடலைமாவையும் சம அளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு வெந்தயத்துடன் வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் நைசாக அரைக்கவும். இந்த பொடியை தண்ணீர் கொண்டு குழைத்து தினமும் குழந்தைகளை குளிக்க வைத்தால் சரும வறட்சி இருக்காது.

வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து,  நன்கு ஆறியபின் அந்தக் கலவையை உடல் முழுவதும் தடவி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் சருமம் மென்மையாகும்.

கை, கால்களில் தோல் அதிகப்படியாக வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளைக் கோடுகளாக சில குழந்தைகளுக்கு தெரியும். அதை போக்க பால் ஏடில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, நன்றாக அரைத்தே கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி சிறிது நேரம் கழித்து, குளியல் பொடி போட்டுக் குளிக்கப்பாட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT