மகளிர்மணி

பாதாம் புலாவ் (காஷ்மீர்)

10 பாதாம் எடுத்து, தோல் எடுத்து சீவி வைக்கவும். மீதமுள்ள பாதாமை ஊறவைத்து, தோல் எடுத்து 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் வழுவழுவென அரைக்கவும்.

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 1 கிண்ணம்
பாதாம்- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
பச்சை பட்டாணி- கால் கிண்ணம்
குங்குமப்பூ- சிட்டிகை
பச்சை மிளகாய்- 4
வெண்ணெய்- 4 மேசைக்கரண்டி


செய்முறை: 


10 பாதாம் எடுத்து, தோல் எடுத்து சீவி வைக்கவும். மீதமுள்ள பாதாமை ஊறவைத்து, தோல் எடுத்து 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் வழுவழுவென அரைக்கவும். ப்ரெஷர் பேனில் வெண்ணெய், பட்டாணி, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், உப்பு, குங்குமப்பூ, அரைத்த பாதாம், பாசுமதி அரிசி சேர்த்து கலந்து, 1 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். சீவின பாதாம் சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT