முகப்பு
மகளிர்மணி

மிளகாய் தொக்கு

பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் துருவல், புளி, வெல்லம் சேர்த்து அரைக்கவும். கடாயில்  எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:21 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சை மிளகாய்-10
உப்பு- தேவையான அளவு
தேங்காய் துருவல்-  கால் கிண்ணம்
பெருங்காயத் தூள்- கால் தேக்கரண்டி
புளி- நெல்லிக்காய் அளவு
வெல்லம்- 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 1 மேசைக் கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை: 

பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் துருவல், புளி, வெல்லம் சேர்த்து அரைக்கவும். கடாயில்  எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்துவரும் வரை கிளறவும். புளியும் தேங்காயும் மிளகாயின் காரத்தைக் குறைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →