முகப்பு
மகளிர்மணி

துளசி சாதம் 

ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி  சூடாக்கவும். அதில்  பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் தொடர்ந்து தக்காளி, துளசி இலைகள் சேர்த்து சிறிது நேரம்  வதக்கவும்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

தேவையானவை:

சாதம்  1 கிண்ணம்
துளசி இலைகள் அரை கிண்ணம்
தக்காளி 1, பச்சை மிளகாய்  2
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
கருப்பு மிளகு தூள் சிறிது,
உப்பு, கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி  சூடாக்கவும். அதில்  பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் தொடர்ந்து தக்காளி, துளசி இலைகள் சேர்த்து சிறிது நேரம்  வதக்கவும். பின்னர்  வேகவைத்த சாதம்,  மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்த பிறகு  தீயை அணைத்து இறக்கவும். அதில்  கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →