முகப்பு
மகளிர்மணி

குமரிப் பெண்ணின் சாகசம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.காம். பட்டதாரியான இந்திரா, தனது கணவர் சதீஷ்முருகனுடன் உலகிலேயே மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

Updated On : 25 ஜூன், 2023 at 12:00 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.காம். பட்டதாரியான இந்திரா, தனது கணவர் சதீஷ்முருகனுடன் உலகிலேயே மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இருவரும் மே 15இல் நேபாளத்தில் உள்ள 5,364 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் பேஸ்கேம்ப் பகுதி வரை ஏறினர். அங்கு  இந்திரா 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதுகுறித்து இந்திரா கூறுகையில், ""முதல் முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது ஆச்சரியம்தான்.  சாதிக்க வயது பொருட்டல்ல. மன வலிமை, விருப்பமும்தான் காரணம். வீட்டு படிக்கட்டுகள், சாய்வு உடற்பயிற்சி இயந்திரங்களில் தினமும் மூன்று மணி நேரம் பயிற்சி மேற்கொண்டோம்.  எந்த பயிற்சியாளரையும் நாடவில்லை.  சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் உள்பட பல்வேறு தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டு, பயணங்களுக்குத் தயாராகினோம்.  

Advertisement

அரபு எமிரேஸ்ட்ஸில் உள்ள ராஸ் அல் கைமா, புஜைரா, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹைகிங் பயணங்களையும் குழுவினரோடு மேற்கொண்டோம்.

ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள பத்தூர் எரிமலை போன்றவற்றை சவாலாகக் கடந்து,  அழகிய காட்சிகளைக் கண்டோம்.

ஜெர்மனில் உள்ள உயர்ந்த மலைகளை ஏற உள்ளோம்'' என்றார்.

ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர்:

நியூஸிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி  20 போட்டியில், நியூஸிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன் என்ற பெண் நடுவராகப் பங்கேற்றார். ஆண்களுக்கு இடையான கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருந்த முதல் பெண் இவர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.