தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி- 1 கிண்ணம்
கோதுமை மாவு- கால் கிண்ணம்
வாழைப்பழம்- 1 கிண்ணம்
தயிர்- அரை கிண்ணம்
சமையல் சோடா- 3 சிட்டிகை
எண்ணெய்- சிறிதளவு
வெல்லம்- 100 கிராம்
தண்ணீர்- 100 மி.லி.
சுக்குத் தூள்- அரை தேக்கரண்டி
செய்முறை:
வாழைப்பழத்தை கூழாக்கிக் கொள்ளவும். குதிரைவாலி அரிசியை களைந்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை கெட்டியாகக் கரைத்து அத்துடன் கலக்கவும். வாழைப்பழக் கூழ், தயிர் போன்றவைகளையும் கலந்து வைக்கவும். அரை மணி நேரம் விடவும். பின்னர், சமையல் சோடா கலந்து மாவை தோசைக் கல்லில் விட்டு சிறு தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு வெல்லப் பாகை தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
(வெல்லப் பாகு செய்வது எப்படி- வெல்லத்தைத் தூளாக்கி, பதத்துக்கு கலந்து பாத்திரத்தில் விட்டு சூடாக்கி தேன் பதத்துக்கு பாகு ஆக்க வேண்டும். அதில், சுக்குத் தூளையும் கலந்துகொள்ள வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.