முகப்பு
மகளிர்மணி

கேரட் சட்னி

வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

கேரட்  கால் கிலோ
காய்ந்த மிளகாய்  4
வெங்காயம்  4
பூண்டு பல்  3
எண்ணெய்  தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது  1 தேக்கரண்டி
தனியா  கால் மேசைக்கரண்டி
உப்பு  தேவையான அளவு

செய்முறை : 

வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அவற்றுடன் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அரைக்கும்போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம்.  இதனை நன்கு மையாக அரைத்தால் கேரட் சட்னி தயார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.