முகப்பு
மகளிர்மணி

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் 

முதலில் கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:


தேவையான பொருள்கள் :

பொன்னாங்கண்ணி கீரை  ஒரு கட்டு
தேங்காய் துருவல்   அரை 
கிண்ணம்
மஞ்சள் பொடி  1 சிட்டிகை
கடுகு  கால் தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு  அரை 
தேக்கரண்டி
சீரகம்  அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்  2
சின்ன வெங்காயம்  10 
(பொடியாக நறுக்கியது)
எண்ணெய்  2 மேசைக்கரண்டி
உப்பு  தேவையான அளவு

செய்முறை : 

முதலில் கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுந்தம் பருப்பு,  சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்து, உளுந்தம் பருப்பு சிவந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு வதக்கவும். பின்னர்,  சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைத்து வேக வைக்கவும்.

கீரையை நன்றாக வதங்கி வெந்ததும் மஞ்சள் பொடியும், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக கிளறி சுண்டியதும் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.