தட்டை
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, பெருங்காயத் தூள், மிளகுத் தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.
தேவையான பொருள்கள் :
அரிசி மாவு - ஒரு கிண்ணம்,
உளுத்தம் மாவு - ஒரு கிண்ணம்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி
ஊற வைத்த கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, பெருங்காயத் தூள், மிளகுத் தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கித் தட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.