மகளிர்மணி

பொரித்த மோதகம்

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - ஒரு கிண்ணம் 
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
வேகவைத்த கடலைப்பருப்பு - அரை கிண்ணம், 
ஏலக்காய்த்தூள்- ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு 
எண்ணெய் - பொரிக்கத் 
தேவையான அளவு 
தேன்,  நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:  

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், வேகவைத்த கடலைப்பருப்பு, பச்சைக் கற்பூரம், பொடித்த வெல்லம் சேர்த்துப் புரட்டினால்  பூரணம் தயார்.   பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தி போல் இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடி மோதகம் தயார் செய்யவும். 

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மோத கத்தைப் பொரித்தெடுக்கவும்.

மேலே தேன் ஊற்றிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT