சட்னி 
மகளிர்மணி

சட்னி செய்ய சூப்பரான டிப்ஸ்

இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டையும் இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியைக் குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

DIN

இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டையும் இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியைக் குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

தேங்காய் சட்னி அரைக்கும்போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காதத் தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான பச்சடி தயார்.

தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

துவையல் அரைக்கும் போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

நாகஜோதி கிருஷ்ணன்,

சேப்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT