மஞ்சள் பூசணி கீர் 
மகளிர்மணி

மஞ்சள் பூசணி கீர்

வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

துருவிய மஞ்சள் பூசணி- ஒரு கிண்ணம்

பால் ஒரு லிட்டர்

சர்க்கரை ஒன்றரை கிண்ணம்

நெய் இரு மேசைக்கரண்டி

முந்திரி, திராட்சை தேவையான அளவு

வெனிலா எசன்ஸ் அல்லது பன்னீர் 2 சொட்டு.

செய்முறை: 

வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் துருவிய மஞ்சள் பூசணியை வதக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் பூசணித் துருவலைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், சர்க்கரையைச் சேர்க்கவும். பாதியாகச் சுண்டியதும், முந்திரி, திராட்சை, வெனிலா எசன்ஸ் அல்லது பனீர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT