வாழைப்பூ உசிலி 
மகளிர்மணி

வாழைப்பூ உசிலி

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை நீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து நீரைவடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

DIN

தேவையானவை:

வாழைப்பூ-1

கெட்டியான மோர்- 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி

பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

துவரம் பருப்பு- 50 கிராம்

பயத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 6

கடுகு, உளுத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை நீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து நீரைவடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர், அதனுடன் பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்தால் உதிரியாகிவிடும்.

வாழைப்பூவை நறுக்கி மோரில் போட்டு எடுத்துப் பிறகு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி வைத்து வெந்த வாழைப்பூ, உதிர்த்த பருப்பு போட்டு வதக்கி கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தசரா ஸ்பெஷல்.... நிகிதா சர்மா!

ஆலங்கிளியே... ஜெனிலியா!

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT