சிறுதானிய சமோஸா 
மகளிர்மணி

சிறுதானிய சமோஸா

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

DIN

தேவையான பொருள்கள்

தினை, கம்பு- தலா கால் கிண்ணம்

உருளைக்கிழங்கு- 1

சீரகம்- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- சிறிதளவு

கரம் மசாலா- அரை தேக்கரண்டி

மேல் மாவு தயாரிக்க:

மைதா- 1 கிண்ணம்

ரவை- அரை கிண்ணம்

நெய்- கால் கிண்ணம்

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறு உருண்டைகளாக்கி பூரிபோல் செய்து தோசைக்கல்லில் லேசாகச் சுட்டெடுத்து இரண்டு அரை வட்டமாக கத்தரித்து வைக்கவும். தினை, கம்பு வறுத்து ரவையைப் போல் உடைக்கவும்.

அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது மசாலா பவுடர், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை வட்டமாக உள்ள பூரியின் நடுவே தினை மசாலாவை வைத்த மூன்று பக்கமும் தண்ணீர்தொட்டு ஓட்டி, முக்கோண வடிவம் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து, மிதமான தீயில் இரண்டிரண்டாக பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸூடன் பரிமாறலாம்.

கோ.மஞ்சரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT