புதினா மல்லி பிரெட் வடை
புதினா மல்லி பிரெட் வடை: சுவையான ரெசிபி!
தேவையான பொருள்கள்:
பிரெட் துண்டுகள்- 6
புதினா இலைகள்- அரை கிண்ணம்
Advertisement
Advertisement
கொத்தமல்லித் தழை- 1 கைப்பிடி அளவு
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, மிக்ஸியில் பொடிக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரெட், உப்பு, வெங்காயம், புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளிக்கவும். பின்னர் வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொடித்து எடுக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.