மகளிர்மணி

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் நிலை..

ஹீலியம் கசிவால் சுனிதா வில்லியம்ஸ் புவிக்கு திரும்புவது தாமதம்

பிஸ்மி பரிணாமன்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாஸாவும், நவீன விமானங்களைத் தயாரிக்கும் "போயிங்' நிறுவனமும் இணைந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐம்பத்து எட்டு வயதாகும் சுனிதா வில்லியம்ஸ், அறுபத்து ஒரு வயதாகும் புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களை "ஸ்டார்ட்லைனர்' விண்கலத்தில் விண்ணில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஜூன் 5-இல் அனுப்பி வைத்தன.

திட்டமிட்டபடி, இருவரும் ஜூன் 13-இல் புவிக்குத் திரும்பியிருக்க வேண்டும். "ஸ்டார்லைனர்' விண்கலத்தில் ஹீலியம் வாயுக் கசிவுடன் வேறு சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதால், இருவரும் புவிக்குத் திரும்புவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் விண்கலத்தில் வேறு வாயு கசிவு ஏற்பட்டதால் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் குறையை சரி செய்தாலும் மீண்டும் நான்கு இடங்களில் ஹீலியம் வாயு கசிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பலமுறை தாமதம் ஆனது.

சர்வதேச விண்வெளி நிலையமானது புவியிலிருந்து சுமார் 403 கி.மீ. தூரத்தில் பயணிக்கிறது. புவியை 90 நிமிடத்துக்கு ஒருமுறை வலம் வருகிறது. "ஸ்டார்ட்லைனர்' விண்வெளிக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஒரு நாள் ஆனது. புவியில் புவிஈர்ப்பு சக்தியிலிருந்து விடுபட விண்கலம் மணிக்கு 70, ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டுமாம். புவிக்குத் திரும்பும் பயணத்தை ஸ்டார்ட்லைனர் ஆறு மணி நேரத்தில் முடிக்கும்.

"எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது' என்று நாசா சொன்னாலும், "ஸ்டார்ட்லைனர்' புவிக்குத் திரும்பி வரும் பயண நாள் முடிவு செய்யப்படாததால் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றவர், 371 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். இறுதியில் சிக்கல்களை சரி செய்யப்பட்டு 2023 செப்டம்பரில் புவிக்குத் திரும்பினார்.

தற்சமயம், 7 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர். அதனால் சுனிதா புட்ச் சில மாதங்கள் விண்வெளியில் தங்குவது பிரச்னை அல்ல.போயிங் நிறுவனம் "ஸ்டார்ட்லைனர்' விண்வெளித் திட்டத்துக்காக, சுமார் 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஐம்பதாயிரம் கோடி) செலவு செய்துள்ளது.

விண்வெளிக்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்லும் சேவையை எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்கலம் செய்து வருகிறது. "ஸ்டர்லைனர்' செயல்படத் தேவைப்படும் எரிபொருள் 45 நாள்களுக்கு மட்டுமே விண்கலத்தில் இருக்கும். ஜூலை 20-க்குள் ஸ்டார்ட்லைனரின் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, விண்வெளி வீரர்களுடன் புவிக்கு வந்தாக வேண்டும். அப்படி தீர்க்கப்படாவிட்டால் விண்வெளி வீரர்கள் விண்வெளி தங்க வேண்டி வரும் அல்லது எலான் மஸ்க்கின் உதவியை நாட வேண்டும்.

"ஸ்பேஸ் எக்ஸ்' விண்கலம் இருவரையும் புவிக்கு கொண்டுவர உதவும். ஆனால் ஸ்டார்ட்லைனரை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இடம் மாற்ற வேண்டும். அப்படி இடம் மாற்றினால் மட்டுமே "ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிலையத்துடன் இணைய முடியும். அப்படி இணைந்தால்தால்தான் சுனிதா, புட்ச் ‘ஸ்பேஸ் எக்ஸ்' விண்கலத்துக்கும் வர இயலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT