மகளிர்மணி

சாதனைப் பெண்கள்...

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம்

DIN

''இருநூறு ஆண்டு கால வரலாற்றில் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக, கிளாடியா ஷீன் பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு மெக்சிகோ. இங்கு தற்போதைய அதிபராக ஆண்ட்ரெஸ்மானுவேல் லோபஸ் ஓபரடார் உள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலில், ஆளும் மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் அறுபது சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனால் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.

மெக்சிகோ மேயரான இவர், காலநிலை மாற்ற விஞ்ஞானியாவார். தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில், ''இது நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கான வெற்றி'' என்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------

'யுனிசெப் இந்தியா' அமைப்பின் புதிய தேசிய தூதராக, கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரன்ஷி ஷாமா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் வர்மா, அஸ்ஸாம் பாடகர் நஹித் அஃப்ரின் ஆகிய நான்கு பேரும் யுனிசெப் இந்தியா அமைப்பின் இளைஞர் தூதர்களா நியமிக்கப்பட்டுள்ளனர்.

-கே.ஏ.ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT