மகளிர்மணி

அரைக்கீரை அல்வா

அரைக்கீரை அல்வா: ஆரோக்கியமான இனிப்பு

ஆர்.ராதிகா

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை - மூன்று கைப்பிடி அளவு (நன்கு ஆய்ந்தது)

கோதுமை மாவு - கால் கிலோ

வெல்லம் - அரை கிலோ

நெய் - 50 கிராம்

முந்திரிப் பருப்பு - 10

ஏலக்காய்த் தூள் - கொஞ்சம்

செய்முறை:

கீரையைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் இட்டு நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து இட்டு, போதிய அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பாதி பதம் வந்ததும், கோதுமை மாவு, நன்கு அரைத்த கீரை விழுது சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். இடைஇடையே நெய் ஊற்றி கைவிடாமல் கிளறி கொடுக்கவும். கலவை நன்கு வெந்ததும், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். தட்டில் பரவலாக வைத்து நன்கு ஆறினதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும். அரைக்கீரை அல்வா தயார்.

-ஆர்.ராதிகா, விக்கிரமசிங்கபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT