டொமோட்டோ கீ ரைஸ்
சுவையான டொமோட்டோ கீ ரைஸ் சமைக்கும் முறை
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
வெங்காயம், தக்காளி- 1
Advertisement
Advertisement
பச்சை மிளகாய்- 3
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
பட்டை- 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய்- தலா 2
முந்திரி, பாதாம்- தலா 3
தேங்காய்ப் பால்- 1 கிண்ணம்
நெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை வறுத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அரிசியைக் களைந்து சேர்த்து ஒரு கிண்ணம் தேங்காய், பாலும் ஒரு கிண்ணம் தண்ணீரும் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கி மேல் சிறிதளவு நெய்விட்டு கிளறி வைக்க, டொமோட்டோ கீ ரைஸ் ரெடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.