முகப்பு
மகளிர்மணி

குதிரைவாலி கொழுக்கட்டை

சுவையான குதிரைவாலி கொழுக்கட்டை செய்முறை

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 11:04 PM

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்

எண்ணெய் -2 தேக்கரண்டி

Advertisement

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத் தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு -2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கவும்

கறிவேப்பிலை, கொத்து மல்லி - சிறிதளவு

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

குதிரைவாலி அரிசியை களைந்து, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். வானொலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து. ஊறவைத்த, வடிகட்டிய குதிரைவாலி அரிசியை போட்டு, நன்றாகக் கலந்து , துருவிய தேங்காயை சேர்த்து கிளறி கெட்டியானதும், அதை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். சூடாக பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.