சிவப்பு அவல்
உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
* இது ஒரு ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளைச் செய்ய ஏற்றது. அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அரிசியிலிருந்து வெள்ளை அவல், சிவப்பு அவல் போன்றவைகளுடன் இப்பொழுது கம்பு அவல், சோள அவல், கேழ்வரகு அவல் என பலவகையான அவல்கள் கிடைக்கின்றன.
* உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
*சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும்போதே நல்ல ருசியாக இருக்கும் .
Advertisement
Advertisement
*வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போஹைட்ரேட் கலோரி உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முதலிடம் பெறுகின்றது.
*இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
* சிவப்பு அவலில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.
பொதுவாக, அவலைத் தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். அவலோடு பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். அவலுடன் மோர் சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும். அவலில் உள்ள சத்துகள் நமது உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகப்படுத்தும்.
*சிவப்பு அவலில் ஏராளமான ஆந்தோசைமின், வைட்டமின் பி1, பி3, பி6 போன்றவைகள் இருக்கின்றன.
*சிவப்பு அவலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்ட்களால் இதய நோய் வராமல் தடுக்கிறது இதயத்தை பாதுகாக்கிறது.
*உடலில் புற்றுநோய் செல்கள் வளருவது தடுத்து குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
*சிவப்பு அவலில் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்தத்தின் அளவை உடம்பில் அதிகரிக்க உதவுகிறது.
-ஆர் ஜெயலட்சுமி, திருநெல்வேலி.