முகப்பு
தினமணி கதிர்

விலங்கு நட்புச் சாலை...

மத்தியப் பிரதேசத்தில் மலைப்பாதையில் வனப் பகுதியின் ஒரு பாகமாக 'வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம்' உள்ளது.

Updated On : 3 மே 2026, 4:14 am IST
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் மலைப்பாதையில் வனப் பகுதியின் ஒரு பாகமாக 'வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம்' உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பாதையில், என்.ஹெச். 45 நெடுஞ்சாலையில், இரு கி.மீ. நீளத்துக்கு 'டேபிள் டாப் ரெட் மார்க்கிங்' என்ற தொழில்நுட்ப சிவப்பு நிற தெர்மோ

பிளாஸ்டிக் சாலைக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் 'விலங்கு நட்பு' பாராட்டும் முதல் நெடுஞ்சாலையாக இது மாறியுள்ளது.

மென்பொருள், சென்சாரில் இயங்கும் வாகனங்களுக்கான நெடுஞ்சாலைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ஒரு சுவாரசியமான ஆய்வானது வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள், சாலைப் பாதுகாப்பு நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

வழக்கமான வேகத் தடைகள் அல்லது அதிர்வுப் பட்டைகளைப் போன்று இல்லாமல், இந்தப் பிரகாசமான சிவப்பு நிற மேற்பரப்பு சற்றே உயர்த்தப்பட்டு, வாகன ஓட்டுநர்களின் பார்வையையும், கவனத்தையும் கவரும் விதமாக சாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வனப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தின்போது தற்செயலாக சாலையில் விலங்கு நுழைந்துவிட்டால், விலங்குகள் வாகனத்துடன் மோதும் அல்லது விலங்குகள் மீது வாகனம் மோதாமல் இருக்க ஓட்டுநர் அவசரம் அவசரமாக பிரேக் போடும்போது வாகனம் விபத்துக்குள்ளாகும்.

இல்லையெனில், இதர வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படும். இவற்றைத் தடுக்கவே சாலையில் புதிய குறியீடுகள் போடப்படுகின்றன.

வனவிலங்கு நடமாட்டம் உள்ள சாலைகளில் வாகனங்கள் மெதுவாக, எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் புதிய குறியீடுகளின் நோக்கம்.

வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் சாலையில் 2 கி.மீ. தூரத்துக்குச் சாலையின் மேல் 5 மி.மீ. கனம் உள்ள அடர் சிவப்புநிற தெர்மோபிளாஸ்டிக் குறிகள் பூசப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பருமனான குறிகளின் மேல் வாகனம் பயணிக்கும்போது அதிர்வும் ஏற்படும். இந்த அதிர்வுகள் வாகனங்கள் அபாயகரமான பகுதியில் பயணிக்கிறது என்பதை ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைப்படுத்தும். சிவப்பு குறியீடு, நிறம் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் இரட்டை எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் விடுக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.