மகளிர்மணி

சோயா ஃபிரைட் ரைஸ்

சுவையான சோயா ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

ஆர்.ராதிகா

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 2 கிண்ணம்

சோயா பயிறு- 100 கிராம்

கேரட்- 1

மிளகாய்- 3

வெங்காயம்- 2

பட்டை- 1 துண்டு

சோம்பு- அரை தேக்கரண்டி

கிராம்பு, ஏலக்காய்- 6

முந்திரிப் பருப்பு- 5

இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி

தேங்காய்ப் பால்- அரை டம்ளர்

நெய்- 50 கிராம்

உப்பு, புதினா கீரை- தேவையான அளவு

செய்முறை:

அடிகனமுள்ள ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, ஆகியவற்றை போட்டு வறுக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், துருவிய கேரட், சோயா பயறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், இத்துடன் போதிய அளவு தண்ணீர், தேங்காய்ப் பால் ஊற்றி, பாசுமதி அரிசியை இட்டு வேகவிடவும். கலவை நன்கு வெந்து நீர் முழுவதும் சுண்டி உதிரியான பதத்தில் இறக்கி, புதினா கீரை, நெய் சேர்த்து கிளறி வைக்கவும். சோயா ஃப்ரைட் ரைஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT