தேவையான பொருள்கள்:
வரகு- 200 கிராம்
உளுத்தம் பருப்பு- 50 கிராம்
மிளகாய்- 3
வெங்காயம்- 2
சோம்பு- 1 தேக்கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, எண்ணெய்,உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைகளைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வரகு, உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, கொர, கொரப்பாக அரைத்து எடுக்கவும். இத்துடன் நறுக்கிய மிளகாயையும், சோம்பு உப்பும் சேர்த்து நன்கு பிசையவும். கலவையை நடுத்தர அளவு வடைகளைத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். இத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பபிட, தனி ருசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.