பஞ்சாபி பஞ்சேரி
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால் பௌடரையும் சேர்த்துக் கலக்கவும்.
தேவையான பொருள்கள்:
ரவை, சர்க்கரை - தலா 2 பெரிய கிண்ணம்
வெண்ணெய் அல்லது நெய் - 2 கிண்ணம்
Advertisement
Advertisement
பால் பௌடர் - 2 கிண்ணம்
பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
உலர்ந்த திராட்சை - 1 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.
சுக்குப் பொடி - 1 மேசைக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால் பௌடரையும் சேர்த்துக் கலக்கவும். பாதாம் பருப்பு, காய்ந்த திராட்சையை வறுத்து போட்டு ஏலக்காய்ப் பொடி தூவி, சுக்குப் பொடி போட்டு, ஜாதிக்காய்ப் பொடி செய்து கிளறி கேசரி போல் பரிமாறவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.