தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க, சீயக்காய்த் தூளை சூடான வெந்நீர் விட்டு கரைத்துத் தலைக்குத் தேய்த்தால், எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கும் நன்கு போய்விடும்.
மழைக் காலங்களில் உப்பு அல்லது பொரித்த அப்பளம், வடாம் ஆகியவற்றை டப்பாக்களில் போட்டு வைக்கும் முன், டப்பாக்களின் மூடியின் அடியில் ஒரு பேப்பரை வட்டமாக வெட்டி வைத்து பிறகு மூடினால், அப்பளம், வடாம் கரகரப்பாக இருக்கும். உப்பு, சர்க்கரை நீர்த்துப் போய்ப் பிசுபிசுப்பு ஆவதைத் தவிர்க்கலாம்.
பேப்பர் போல நமுத்து விட்ட அப்பளத்தை மீண்டும் சூடான எண்ணெயில் போட்டு பொறித்தால் மொறு மொறு என்று ஆகிவிடும்.
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தவுடன், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன், ஒரு கற்பூர வில்லை, கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு சூடுசெய்து, பொறுக் கும் சூட்டில் தேய்த்துவிட உடனே சரியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.