மகளிர்மணி

வாழைக்காய் சட்னி

வாழைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

வாழைக்காய் 1

தேங்காய்த் துருவல்' கால் கிண்ணம்

காய்ந்த மிளகாய்' 10

உளுத்தம் பருப்பு' 4 தேக்கரண்டி

கடுகு' 1 தேக்கரண்டி

உப்பு, புளி, எண்ணெய்' தேவையான அளவு

பெருங்காய்' 1 சிட்டிகை

செய்முறை:

வாழைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பின்னர், வாழைக்காய் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். அத்துடன் தேவையான உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்துக்கு அரைத்தால், வித்தியாசமான சட்னி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

SCROLL FOR NEXT