மகளிர்மணி

மாம்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தற்போது மாம்பூ சீசன். அதன் அடுத்த நிலையான மாவடு,மாங்காய், மாம்பழங்களும் வர ஆரம்பித்துவிட்டன.

ராஜிராதா

தற்போது மாம்பூ சீசன். அதன் அடுத்த நிலையான மாவடு,மாங்காய், மாம்பழங்களும் வர ஆரம்பித்துவிட்டன.

மாவடு வடுமாவடாக போடப்பட்டு வீடுகளில் பயன்படுத்துகின்றனர். மாங்காயை பச்சடி,பொடிப் பொடியாக நறுக்கி உப்பு அல்லது காரம் சேர்த்து உப்பு, உரப்பு மாங்காய் என குழம்பு ,தயிர் சாதங்களுக்கு சைட் டிஷ்ஷாக மயன்படுத்துகின்றனர். மாம்பழம் பழமாக சாப்பிடப்படுகிறது.

ஆனால் மாமரத்தில் முதலில் அழகுற தோன்றும் மாம்பூவை மறந்துவிடுகிறோம். இந்த மாம்பூவும் மனிதர்களின் உடலுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.

மாம்பூவில் அமினோ ஆசிட்,ஆன்டி ஆக்சிடெண்ட், மான்கிஃபெரின் என்ற சத்தும் உள்ளது. இவற்றில் முதல் இரண்டும் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுபவை. மூன்றாவதோ இன்சுலின் செயல்பாட்டை கூட்டுகிறது.

நல்ல நீரில் இரவே மாம்பூவை ஊற வைத்து விடியற்காலையில் வடிகட்டி தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில், காலையில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் மாம்பூவை போட்டு வைக்கவும்.நன்கு கலந்தவுடன் வடி கட்டி சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. தோல் சார்ந்த தொல்லைகள் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

மாம்பூவால் விளையும் மற்ற நன்மைகள்:

கொழுப்பு எரிதலை ஆதரிக்கிறது.

ரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

மூளை செயல்பாடு, மன தெளிவு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நச்சு நீக்கலை ஊக்கப்படுத்தும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டி, நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.

ஆற்றல், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால், இளமையாகக் காட்சியளிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT