மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

மூக்கிரட்டைக் கீரையைக் கடைந்து சாப்பிடுவது, சர்க்கரை நோய்க்கு நல்லது.

தினமணி செய்திச் சேவை

மூக்கிரட்டைக் கீரையைக் கடைந்து சாப்பிடுவது, சர்க்கரை நோய்க்கு நல்லது.

மாங்காய் இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

நெஞ்சுச் சளி இருந்தால், முள்ளு முருங்கை இலை சேர்த்து அரைத்து, தோசை அல்லது அடைதோசை செய்து சாப்பிடலாம்.

காய்ச்சல் இருக்கும்போது புளி சேர்க்காமல், பொரிச்ச ரசம் செய்து சாப்பிடுவது நல்லது.

வாழைத்தண்டில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கல் வராது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பெண்களின் கருப்பைக்கு நல்லது. மாதவிடாய்க் கோளாறும் நீங்கும்.

கரிசலாங்கண்ணித் துவையல், கறிவேப்பிலைத் துவையல் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் மேம்படும். தலைமுடி நன்றாக வளரும்.

மாதுளம் பழம் சாப்பிடுவதாலும், பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதாலும் ரத்த விருத்தி ஏற்படும்.

அல்சருக்கு முட்டைக்கோஸ், வெண்பூசணி ஜூஸ் செய்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

காதில் தோடு போடும் இடத்தில் அரிப்பு வந்தால், கடுக்காயை அரைத்துப் போட வேண்டும்.

சிறிது கசகசாவை மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும்.

அகத்தி இலையை நீரில் போட்டு அரைத்து, அந்த ரசத்தை மூன்று வேளை சாப்பிட்டால், நாக்குப் புண் ஆறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேல்பூரி

அதெல்லாம் ஒரு ஜாலிதான்... மமிதா பைஜூ!

கடைசி கிராமம்...

பிஞ்சுக் காய்கள்

தாய்மொழி என்றே சொல்லிடடா ...

SCROLL FOR NEXT