மூலிகை மருத்துவம்
பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண் பார்வை அதிகரிக்கும்.
சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு மஞ்சளுடன் வைத்து மையாக அரைத்து வேனற் கட்டி மீது தடவி வர, விரைவில் குணமாகும்.
ஓமத்துடன் வெல்லம் சேர்த்து பொடித்து தின்றால் வயிற்று வலி நீங்கும்.
Advertisement
வில்வப் பழத்தை பாலில் கலந்து குடித்து வர, மூலநோய் குணமாகும்.
-உ.இராமநாதன், நாகர்கோவில்.
வறுத்த கிராம்பு, வறுக்காத கிராம்பு நான்கை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் விலகும்.
வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊற வைத்து அருந்திவர, கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.