மிளகு சாதம்
பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
வடித்த சாதம்- 2 கிண்ணம்
மிளகு- 2 மேசைக்கரண்டி
Advertisement
Advertisement
சீரகம்- 1 மேசைக்கரண்டி
பூண்டு- 8 பல்
கறிவேப்பிலை, உப்பு, நெய்- தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு
செய்முறை:
பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து தூளாக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து அத்துடன் வடித்த சாதம், உப்பு, பொடித்து வைத்துள்ள தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான மிளகு சாதம் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.