தாய்ப் பால் தானம்...
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த முப்பத்து ஆறு வயதான அலிஸ் ஒக்லெட்ரீ, 2,645.58 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த முப்பத்து ஆறு வயதான அலிஸ் ஒக்லெட்ரீ, 2,645.58 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். இந்தச் சாதனை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் 2014-ஆம் ஆண்டில் 1,569.79 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருந்தார். இந்தச் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டில் இவர் தனது முதல் மகன் கைஸ் பிறந்தபோது, தாய்ப்பால் தானம் செய்யத் தொடங்கினார். வடக்கு டெக்சாஸின் தாய்ப்பால் வங்கியின் மதிப்பீட்டின்படி, ஒரு லிட்டர் தாய்ப்பாலில் 11 குறைப் பிரசவக் குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியும். இந்த அளவின்படி, இவர் தானத்தின் வாயிலாக 3.50 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.