மகளிர்மணி

கொண்டைக்கடலை வெண்டைக்காய்க் குழம்பு

வெண்டைக்காயைப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊறவைத்து, கரைக்கவும்.

விஜி

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய்- கால் கிலோ

கொண்டைக்கடலை- 2 கிண்ணம்

அரிசி களைந்த தண்ணீர்- 2 கிண்ணம்

புளி- நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்-

தலா 3

சின்ன வெங்காயம்- 15

(தோல் உரித்தது)

உளுத்தம் பருப்பு, வெந்தயம்- தலா அரை தேக்கரண்டி

பூண்டு- 10 பல்

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயைப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊறவைத்து, கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வேக வைத்த கொண்டைக்கடலையும் சேர்த்து வதக்கவும். புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது, இறக்கி பரிமாறவும். இந்தக் குழம்பை செட்டிநாடு பகுதியில் 'மண்டி' என அழைப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்திய - ரஷிய உறவு! புதின் பேச்சு

கண்ட நாள் முதல்... ஆர்த்தி சிகாரா

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கர நிலநடுக்கம்! 800 பேர் பலி, 2500 பேர் காயம்!

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

SCROLL FOR NEXT