தேவையான பொருள்கள்:
தனியா- அரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2
ஓமம்- 2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி- கால் தேக்கரண்டி
பொடித்த வெல்லம்- அரை தேக்கரண்டி
புளி- நெல்லிக்காய் அளவு
கடுகு- அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- தேவையான அளவு
செய்முறை:
தனியா, பருப்பு, ஓமம், கறிவேப்பிலையை வறுத்துப் பொடிக்கவும். புளியை கால் லிட்டர் தண்ணீரில் கரைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் பொடி சேர்த்து மேலும் 200 மி.லி. நீர் சேர்த்து பொங்கி வரும்போது இறக்கி வெல்லத் தூள் சேர்க்கவும். பின்னர், நெய்யில் கடுகு தாளிக்கவும்.
கே.நாகலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.