பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவிவிட்டு மோரில் உப்பு போட்டு சேர்த்து, நன்றாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
கறிவேப்பிலை வாங்கும்போது சிறிய இலைகளைக் கொண்டவைகளை வாங்கினால், மிகுந்த மணல் கொண்டதாகவும் இருக்கும். சீக்கிரமாக அறைபட்டு சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். நீண்ட இலைகளில் அவ்வளவாக மணல் இருக்காது.
பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம் போன்றவைத் தயாரிக்கும்போது, பருப்பு, அரிசி நன்றாக வெந்தவுடன் இனிப்பைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பே சேர்த்துவிட்டால் நன்றாக வேகாது. பால் பாயசத்தில் பச்சரிசி நன்றாக வேகும் முன்பே இனிப்பு சேர்த்தால் பாயசம் திரிந்துவிடும்.
இஞ்சியைத் தோல் நீக்கிட, அதை தண்ணீரில் மண் போகும் வரை கழுவி, அம்மிக்கல்லில் இரண்டு கைகளாலும் தேய்த்தாலே போதும். தோல் சுத்தமாக உரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.