மகளிர்மணி

ராஜஸ்தான் பேரீச்சை உருண்டைகள்

பேரீச்சம் பழத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு,தேங்காய்த் துருவலையும் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பேரீச்சை கொட்டை நீக்கியது - 500 கிராம்

எள், தேங்காய்த் துருவல் - தலா1 மேசைக்கரண்டி

கெட்டியான காய்ச்சிய பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 250 கிராம்

நெய், வெள்ளை எள் - தலா 1 தேக்கரண்டி

ரோஸ் எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி

உலர்ந்த திராட்சை - 10 கிராம்

சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு

பாதாம் பருப்பு, முந்திரி உடைத்தது -தலா 10

செய்முறை:

பேரீச்சம் பழத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு,தேங்காய்த் துருவலையும் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கொதித்தவுடன் அடுப்பைக் குறைத்து, கட்டியாகும் வரை கிளறி இறக்கவும். இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்துக் கோவாவைப் பொன்னிறமாகக் கிளறவும்.

அதில் ஏற்கனவே கிளறி வைத்துள்ள பேரீச்சை, பொடி செய்த சர்க்கரை, பாதாம், முந்திரி, எள், திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து எல்லாம் வாணலியில் ஒட்டாமல் வரும்வரை மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் ஏலக்காய்த்தூள், எசென்ஸ் சேர்க்கவும். பிறகு கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு கிளறிய விழுதை சிறிய எலுமிச்சை வடிவில் உருட்டி முந்திரித்துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT