புதினா குழம்பு 
மகளிர்மணி

புதினா குழம்பு

முதலில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

பட்டாணி, கேரட், பீன்ஸ், பனீர் -தலா 100 கிராம

வதக்கி அரைக்க:

புதினா - ஒரு கட்டு

கொத்து மல்லி - அரை கட்டு

கறிவேப்பிலை - கால் கட்டு

பச்சை மிளகாய் - நான்கு

இஞ்சி - ஒரு எலுமிச்சை பழ அளவு

பூண்டு - 5 பல்

வெங்காயம் - முன்று

தக்காளி - நான்கு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். கடைசியாக கொத்துமல்லி, புதினா, கறிவேப்பிலையை கழுவி அதையும் சேர்த்து வதக்கவும். வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

எண்ணெய் காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ அவனில் வேகவைத்து எடுக்கவும். தற்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT