இனிப்புகள், காரம், பாயசம், பொங்கல், குக்கீஸ் உள்ளிட்டவற்றுக்கு உலர்ந்த பழங்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை வாங்கி பிரிட்ஜ் ப்ரீசரில் வைத்து தேவையானபோது, மட்டும் எடுத்து பயன்படுத்துவர். அதே சமயம் அவற்றை நாம் எப்படி பல மாதங்கள் கெடாமல் பயன்படுத்துவது என அறிவது நல்லது.
எப்போதும் குளிர்ந்த, இருண்ட இடத்தில் சேமிப்பது நல்லது. சேமிப்பதற்கு ஏற்ற வெப்ப நிலை 10-15 டிகிரி. குளிர்சாதனப் பெட்டியின் மிருதுவான டிராயரில் வைக்கலாம்.
உறைய வைத்து கனமான பாத்திரங்களில் சேமிக்கலாம். உறைபனி அவற்றின் ஆயுளை நீட்டிக்கிறது. பயன்படுத்தும்போது கொஞ்ச நேரம் அறை வெப்பத்தில் வெளியே வைத்து விட்டு பயன்படுத்தலாம்.
ஈரப்பதத்தை உறிஞ்சும் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். இது பொருள்களைப் புதிதாகவும் பூஞ்சை காளான்கள் இல்லாமலும் பாதுகாக்கும்.
காற்று, ஈரப்பதத்துடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்க்கவும். வால்நட் பருப்பை சேமிக்க இது மிக அவசியம்.
உணவுத் தர பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே டப்பாவில் போட்டு வைக்கக் கூடாது. சிலவற்றில் மற்றவற்றைவிட அதிக ஈரப்பதம் இருக்கக் கூடும். ஆகவே, தனித்தனி டப்பாக்களில் வைத்து பாதுகாப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.