மகளிர்மணி

அசத்தும் மாணவி...

சிலம்பம், ஓட்டப் பந்தயம். குண்டு எறிதல், கலைப் போட்டிகள்.. என்று விளையாட்டில் அசத்தி வருகிறார் பள்ளி மாணவி சி.மா.சுபஹரிணி.

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

சிலம்பம், ஓட்டப் பந்தயம். குண்டு எறிதல், கலைப் போட்டிகள்.. என்று விளையாட்டில் அசத்தி வருகிறார் பள்ளி மாணவி சி.மா.சுபஹரிணி.

அவரிடம் பேசியபோது:

'எங்களது பூர்விகம் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகேயுள்ள திருநரையூர். நான் பிறந்து வளர்ந்தது திருச்சி மாவட்டத்தில்தான். தற்போது எடமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறோம். அப்பா சிவதாஸ், பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறை பணியில் இருக்கிறார். அம்மா மாலா இல்லத்தரசி. கிராப்பட்டி சாந்தமரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன்.

ஆங்கிலப் பள்ளியில் நான் படித்தாலும், தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முதலில் சிலம்பப் பயிற்சியை பள்ளியில் கற்கத் தொடங்கினேன். பின்னர், யோக ராஜேஷ் என்ற பயிற்சியாளரிடமும் தனியே கற்றேன். ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பயிற்சிகளுக்காக பாக்கியராஜிடம் பயிற்றி பெறுகிறேன்.

காலை 5 மணிக்கே எழுந்து பயிற்சிக்கு சென்று விடுவேன். பின்னர், பள்ளி, அதன்பின்னர் மாலை பயிற்சி. இரவு படிப்பு. இப்படி கல்வியிலும், விளையாட்டியிலும் சுறுசுறுப்போடு செயல்படுகிறேன்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரைக்கும் ஐம்பதுக்;கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள், சுழற்கேடயங்களைப் பெற்றுள்ளேன்.

2025 மே மாதத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து பதக்கம் பெற்றது, திருச்சியில் 2025-இல் 100 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை' என்கிறார் சுபஹரிணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

SCROLL FOR NEXT