தேவையான பொருள்கள்:
தக்காளி- கால் கிலோ
அரிசி- 2 தேக்கரண்டி
தேங்காய்- அரை மூடி
முந்திரி, திராட்சை- தலா 10
ஏலம், கிராம்புத் தூள்- தலா அரை தேக்கரண்டி
சர்க்கரை- கால் கிலோ
நெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
தக்காளியைக் கழுவி முழுதாக வேக வைத்து, தோலுரித்து சாறு எடுக்கவும். அரிசி, தேங்காய்ப் பூ, தலா 5 முந்திரி, திராட்சைகளை நைஸாக அரைக்கவும். அதனுடன் தக்காளி சாற்றை சேர்க்கவும்.
ஒரு கொதிவிட்டு ஏலம், கிராம்புத் தூளைப் போட்டு கீழே இறக்கி, மீதமுள்ள முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்தால், புதுமையான தக்காளி பாயசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.