முகப்பு
மகளிர்மணி

நுங்கு புடிங்

அடிகனமான பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும்.

Updated On : 14 ஜூன், 2025 at 6:39 PM
நுங்கு புடிங்
பகிர்:

தேவையான பொருள்கள்:

நுங்கு - 5

பால் - 1/2 லிட்டர்

கண்டன்ஸ்டு மில்க் -

3 மேசைக்கரண்டி

சைனா கிராஸ் - தேவையான அளவு

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, கலந்து கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். சைனா கிராஸை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அடுப்பில் வைத்து, சைனா கிராஸ் கரையும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பால் கண்டன்ஸ்டு மில்க் கலவையுடன் நுங்கு, சைனா கிராஸ் சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றிக் குளிரவைத்துப் பரிமாறவும்.

நாகஜோதி கிருஷ்ணன், சேப்பாக்கம்.

முழு கட்டுரையைப் படிக்க →