மகளிர்மணி

அரைக்கீரை மசாலா

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை- 1 கட்டு (பொடியாக நறுக்கியது)

உருளைக் கிழங்கு- 2 (தோல் சீவி நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2 நறுக்கியது

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

சீரகம்- அரை தேக்கரண்டி

பட்டை- சிறு துண்டு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும், பின்னர், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, 1 கிண்ணம் தண்ணீர் சேர்க்கவும்.

கீரையை நன்றாக வேகவைத்து, மசித்து உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து கிளறி வேகவிடவும். கடைசியாக, சீரகம், பட்டை தாளித்துக் கொட்டி நன்றாகக் கிளறி எடுக்கவும். அரைக்கீரை மசாலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

SCROLL FOR NEXT