தேவையான பொருள்கள்:
குதிரைவாலி மாவு - 1/2 கிலோ
பொடித்த வெல்லம் - 1/4 கிலோ
துருவிய தேங்காய் - 2
ஏலக்காய் பொடி - 1/4 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
தேங்காயைத் துருவலோடு வெல்லம், ஏலக்காய் பொடியைச் சேர்த்து, அடுப்பில் வைத்துகெட்டியாகும்வரை கிளறவும். தனியாக இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்துகொதிக்க விடவும்.
குதிரைவாலி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டியாகாமல் கிளறவும். இந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளே தேங்காய்ப் பூரணம் வைத்து மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான குதிரைவாலி பூரண கொழுக்கட்டை ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.